கலைஞர்களை பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவது நம் நாட்டின் தொன்றுதொட்டு வரும் மரபாகும். இது அந்த கலைஞனுக்கு மேலும் உற்சாகமூட்டி கலையில் தனக்குள்ள ஈடுபாட்டை மேலும் வளரச் செய்கிறது. அவ்வகையில் எனது நண்பரும், சக கலைஞருமான திரு. உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கு பாராட்டு விழா என அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அயராத உழைப்பும், விடாமுயற்சியும் ஒரு கலைஞனுக்கு எத்தகைய சிறப்பையும் புகழையும் கொண்டு சேர்க்கும் என்பதற்கு திரு. சிவராமன் அவர்கள் இளம் கலைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
தான் வாசிக்கும் கச்சேரிகளில் எப்போதும் உற்சாகத்துடன் காணப்படும் திரு. சிவராமன், அவர்கள் தன்னுடன் உட்காரும் சக கலைஞர்களையும் உற்சாசகப்படுத்தி கச்சேரிகளின் வெற்றிக்கு பெரும் துணையாக இருப்பதோடு இளம் கலைஞர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் அடைவார்.
கடந்த ஐம்பது ஆண்டுகள் தன்னுடைய சிறந்த வாசிப்பு திறமையினால் பல ரசிகர்களை கவர்ந்த நண்பர் திரு. உமையாள்புரம் சிவராமன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுள் பெற்று இன்று போல் என்றும் இசையுலகில் திகழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
(Article written on Dr. Umayalpuram K Sivaraman’s completion of 50 Years of service to Carnatic Music)